உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நுவரெலியாவில் மக்கள் அவதி பாலம் இன்னும் செப்பனிட படாமல் உள்ளது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நுவரெலியா மக்களின் உயிர் நரம்பாக செயல்படும் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் முக்கிய பாலம், தித்வா புயலால் கடுமையாக சேதமடைந்து இன்று வரை புனரமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அனர்த்தம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும், நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படாமல் தற்காலிக மாற்றுப் பாதை ஒன்றை மட்டும் அமைத்து அதிகாரிகள் தங்கள் பொறுப்பை மறந்துவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த பாதை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நுவரெலியா மாநகரசபை நகர அபிவிருத்தி குறித்து பெரிய பெரிய திட்டங்களைப் பேசுகிறது. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையான ஒரு பாலத்தையே ஆறு மாதங்களாக சீரமைக்க முடியாது உள்ளது.

மேலும், சுற்றுலா நகரமாக விளங்கும் நுவரெலியாவின் அடிப்படை கட்டமைப்புகள் கூட பராமரிக்கப்படாத நிலையில் இருப்பது, மாநகரசபையின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

நகரின் அழகுபடுத்தலுக்காக  செலவிடப்படும் நிலையில், மக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் புறக்கணிக்கப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், உடனடியாக பாலத்தை புனரமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நுவரெலியா மாநகர சபை முதல்வர் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

1 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0