உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 05.05.2026

ராசி பலன்கள் 5 மாதங்கள் முன்
44 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்டு வந்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷமும் இரட்டிப்பாகும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கிய பிரச்சினைகள் விலகும். வீண் விரைய செலவுகள் குறையும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாட்டில் மன நிறைவு உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சாந்தமான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் சரிவர நடக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். நீங்கள் செல்லும் இடமெல்லாம் மரியாதையும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வரலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம். நேரத்தை வீணடிக்காமல் உங்களுடைய கடமைகளை சரிவர முடித்து விட்டால் போதும். வரும் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அனாவசிய பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். அலைச்சல் இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எதிரி தொல்லை இருக்கும். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நிதானம் தேவை.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். இடம் மாற்றம் சம்பள உயர்வுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கைக்கு தேவையான தெளிவான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். விநாயகர் வழிபாடு செய்து விட்டு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக காரிய தடைவிலகும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வரும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் தொல்லை நிறைந்த நாளாக தான் இருக்கும். வேலையும் வியாபாரமும் சுறுசுறுப்பாக இருக்காது. உடல் அசதி இருக்கும். வீட்டில் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். முன்கோபம் வேண்டாம். நீண்ட தூர பயணங்கள் வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள் தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். தேவையற்ற சந்தேகங்கள் விலகும். நிதானமாக சிந்தித்து பக்குவமாக நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். கடன் தொல்லை குறையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையான நாளாக இருக்கும். உங்களுடைய கடமையில் கண்ணும் கருத்தோடும் நடந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுறுசுறுப்பு இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

99 0 0