உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெலிக்கடை சிறை கைதி உயிரிழப்பு ; பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
113 பார்வைகள்

வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதி சிறையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகளின் பெரும் முயற்சிக்குப் பின் அவரை மீண்டும் பிடித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைதியின் குடும்ப உறவினர்கள், சிறை அதிகாரிகள் அவரைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், நேற்று 3 ஆம் திகதி பிற்பகல் சிறையில் உள்ள விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வதற்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையிலேயே கைதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தப்பிச்சென்ற கைதியை உடனடியாகப் பின்தொடர்ந்த சிறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பின் பொரெள்ள பகுதியில் வைத்து கைது செய்தனர்.

அப்போது கைதிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கைதி மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படும் கைதி, சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, சிறைக்கைதி உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

152 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

143 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

135 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

134 0 0