உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாதனை படைத்த சுனில் நரைன்; பாராட்டி தள்ளிய ஷாருக்கான்!

75 பார்வைகள்

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சுனில் நரைன். வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர் ஐ.பி.எல். தொடரில் இதுவரை எந்த சர்வதேச வீரரும் எட்டாத சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று மதியம் நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது சுனில் நரைன் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதன்படி ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.


இதுவரை இல்லாத அளவுக்கு முதல் சர்வதேச வீரராக சாதனை படைத்த சுனில் நரைனுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அந்த பதிவில், “சுனில், என் நண்பா 15 சீசன்கள் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் 3 கோப்பைகள் மற்றும் உலகம் முழுவதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்னும் பல சாதனைகள் படைத்த உனக்கு என் வாழ்த்துகள்!!!


நீ ஒரு மந்திரவாதி; எங்கள் சொந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவரை போலவே நாங்கள்.
உன்னை நேசிக்கிறோம். இன்றும், என்றும் உனக்கு என் அன்பு ஆரோக்கியத்துடன் இரு; எப்போதும் புன்னகை செய்!,” என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

92 0 0