துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்.!
கண்டி – கட்டுகஸ்தோட்டை, குஹாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுத்திகரிப்புப் பிரிவு மேற்பார்வையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


