உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாளின் முத்தேர் இரதோற்சவம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
72 பார்வைகள்

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பத்தில் பிள்ளையார் வழிபாடுகளை தொடர்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நாகம்மாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

பின்னர் நாகம்மாள் உள்வீதியூடாக வலம்வந்து தேரில் எழுந்தருளியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முதலாவது தேரில் பிள்ளையாரும், அடுத்த தேரில் முருகப் பெருமானும் வலம்வர மூன்றாவது தேரில் நாகம்மாள் எழுந்தருளியாக வீற்றிருந்து, வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்போது பக்தர்கள் காவடி, பாற்செம்பு, அங்கப் பிரதிஷ்டை, கற்பூரச் சட்டி மூலம் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இந்த இரதோற்சவத்தை காண இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் மட்டுமல்லாமல், புலம்பெயர் தேசங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. இலங்கையில் நாகம்மாளுக்கு காணப்படும் இரண்டாவது பெரிய ஆலயம் இதுவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

150 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

140 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

133 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0