ரணசிங்க பிரேமதாஸவின் 33ஆவது நினைவு தின நிகழ்வு.!
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் 33 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று காலை விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
கொழும்பு, புதுக்கடை உயர் நீதிமன்றத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் திருவுருவச் சிலை வளாகத்தில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
அங்கு அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலிகள் செலுத்தப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரது தாயார் ஹேமா பிரேமதாஸ உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நேற்று மாலை கங்காராம விகாரையில் இடம்பெற்ற தர்ம போதனை நிகழ்வைத் தொடர்ந்து, இன்று காலை அன்னாரது சிலையடியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.










