உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனுமதி பெறப்பட்டுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்து விபத்துக்களை தடுக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
99 பார்வைகள்

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதான பாதைகளில் அடிக்கடி வாகன விபத்துகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த நான்கு மாதங்களில் பாரிய அளவிலான மூன்று வாகன விபத்துகளும் இரண்டு சிறிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இருந்த பிரதேச சபை நிர்வாகத்தின் போது அனுமதி பெறப்பட்டுள்ள பாதைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக வாகன விபத்துக்களை ஓரளவு குறைக்க முடியும் என முன்னாள் பிரதேச சபைத் தலைவரும் இந்நாள் உறுப்பினருமான கே. குழந்தைவேல் ரவி தெரிவித்தார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நோர்வூட் பிரதேச சபை நிர்வாக எல்லைக்கு உட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று சென்.ஜோன் டிலறி பகுதியில் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். பாதைகள் செப்பனிடப்படாமல் இருப்பதும் விபத்துகளுக்கு ஒருவகையில் காரணமாக இருக்கின்றது.

இதற்கு முன்னர் இருந்த பிரதேச சபை நிர்வாகத்தில் 6 பாதைகளை செப்பனிட்டு அபிவிருத்தி செய்ய அனுமதி பெறப்பட்டு, நிதிக்கான மதிப்பீடும் செய்யப்பட்டிருந்தது. அவற்றில் பொகவான – லின்ஸ்டட், பொகவந்தலாவ – கியூ, நோர்வூட் போட்ரி வழியாக டின்சின், புளியாவத்தை நியூட்டன் வழியாக கிளங்கன் வைத்தியசாலை, ராணிக்காடு – கெம்பியன், சென்.ஜோன் டிலறி கியூ பாதைகளும் அடங்கும். இவற்றை அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சபை அனுமதி வழங்கியிருந்த போதிலும், கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில பாதைகளின் செப்பனிடும் பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றான சென்.ஜோன் டிலறி பாதையில் அண்மையில் வாகன விபத்து ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.

சில பாதைகளில் மாகாண சபையின் ஊடாக அனுமதிக்கட்ட தனியார் பேருந்துகளும் சேவையில் ஈட்டுபட்டு வருகின்றன. பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் அன்றாடத் தேவைக்கு பெருமளவில் பயன்படுத்தி வரும் பிரதான போக்குவரத்துப் பாதைகளை செப்பனிட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டியது பிரதேச சபையின் பொறுப்பாகும் என்பதை மறந்து விடக் கூடாது.

மே மாதத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அந்த நேரத்தில் அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நோர்வூட் பிரதேச சபைக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள பாதைகளை உடனடியாக அபிவிருத்தி செய்ய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, வளைவுகள் அதிகமாக உள்ள பிரதான பாதைகளில் பாதுகாப்பை கருத்திற் கொண்டு எச்சரிக்கை பலகை (Signal Board) பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0