உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

திடீரெனக் கழன்ற முச்சக்கர வண்டியின் சக்கரம்; லொறியுடன் மோதி சாரதி மரணம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஹோரண – பாதுக்கை பிரதான வீதியின் ஜயந்தி மாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி , ஹோரணப் பகுதியிலிருந்து பாதுக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அதன் பின்னாலுள்ள சக்கரம் ஒன்று திடீரெனக் கழன்றுள்ளது. இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி , எதிரே வந்த லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாகப் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்தில் ஹத்தரலியத்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

45 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

58 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0