உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆஸ்திரேலிய கடன் நிதி திருட்டு; சுயாதீன விசாரணை வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை திருடப்பட்டமை தொடர்பாக, சுதந்திரமான மற்றும் கட்சி சார்பற்ற விசாரணையை முன்னெடுக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இந்த நிதி மோசடி விவகாரத்தில் ஜனாதிபதி நேரடியாகத் தலையீடு செய்து, முறையான விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும். குறிப்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகளை மேற்கொள்வதே மிகவும் பொருத்தமானது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை அல்லது நபர்களைத் தற்காலிகமாகப் பணி இடைநீக்கம் செய்யாமல், அவர்களை முழுமையாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அத்துடன், நாட்டுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களிலிருந்து மீள வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய நிதி அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விலகி, அதனைப் பொறுப்பு வாய்ந்த ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாட்டின் திறைசேரியே இவ்வாறான ஊடுருவல்களுக்கு உள்ளாகுமாயின், இலங்கையில் முதலீடு செய்வதற்கு எவரும் முன்வர மாட்டார்கள். இது தொடர்பில் அரசு நாட்டுக்கு முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

147 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

129 0 0