உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெசாக் வாரத்தில் மாடு அறுப்பதைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
18 பார்வைகள்

“பௌத்த மக்கள் புனிதமாகப் போற்றும் வெசாக் வார காலப்பகுதிக்குள் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் (ஹஜ்) நிகழ்வுகள் அமைவதால், மாடுகள் அல்லது ஏனைய விலங்குகளைப் பலியிடுவது தொடர்பில் அரசு இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என்று கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை இஸ்லாமிய நாட்காட்டியின் படி மே மாதம் 30 ஆம் திகதி ஹஜ் பெருநாள் அமையக்கூடும் எனக் கருதப்படுகின்றது. அதேவேளை, பௌத்தர்களின் புனிதமான வெசாக் வாரம் மே மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதனால் வெசாக் வாரத்துக்குள்ளேயே இஸ்லாமியர்களின் குர்பான் கொடுக்கும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இது குறித்து ஞானசார தேரர் மேலும் கூறுகையில்,
“அனைத்து உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. எனவே, தன்னையே உதாரணமாகக் கொண்டு பிற உயிர்களைக் கொல்லவோ, அதற்குத் தூண்டவோ கூடாது என்பதே பௌத்த தர்மத்தின் போதனையாகும்.

விலங்குப் பலியிடல் மற்றும் பசு வதை போன்ற செயல்களால் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைதியற்ற சூழல்கள் உருவானதை நாம் அறிவோம். புனிதமான வெசாக் வாரத்தில் இவ்வாறான செயல்கள் இடம்பெறுவது தேவையற்ற சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும்.

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், மத ரீதியான கருத்துக்கள் இணையத்தளங்கள் வாயிலாக ஆவேசமாகப் பரிமாறப்படுகின்றன. இவ்வாறான நிலையில், உள்நாட்டில் இத்தகைய செயற்பாடுகள் பாரிய மோதல்களுக்கு வித்திடக்கூடும்.

மதச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியது அவசியம் என்ற போதிலும், நாட்டின் அமைதியைப் பேணுவது அதைவிட முக்கியமானது. எனவே, வக்பு சபை மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் இணைந்து அரசு இது குறித்து உரிய ஒருங்கிணைப்பை மேற்கொள்ள வேண்டும். வெசாக் வாரத்தில் விலங்குப் பலியிடுவதைத் தவிர்ப்பது அல்லது அதனை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.” – என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0