உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 26.04.2026

ராசி பலன்கள் 5 மாதங்கள் முன்
58 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். சின்னச் சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். மன குழப்பம் ஏற்படும். தடுமாற்றம் வரும்போது புது முடிவுகளை எடுக்க வேண்டாம். இறை வழிபாடு செய்யுங்கள் அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு சிந்தித்து செயல்படுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்லது நடக்கும். புது மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய பேச்சுக்கு நாலு பேர் ஆதரவு தெரிவிப்பார்கள். உங்களுடைய பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்திலும் பெருசாக எதிர்பார்ப்பு வைக்கக்கூடாது. ஏமாற்றம் வர வாய்ப்பு உள்ளது. உங்களுடைய கடமைகளை மட்டும் சரியாக செய்து விடுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். இறைவனின் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். வெயில் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடவும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஓய்வு எடுப்பதற்கு நேரம் இருக்காது. உடல் சோர்வு ஏற்படும். நிறைய தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை கையில் எடுக்கலாம். வேலையில் நிதானம் இருக்கட்டும். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். நிதி நிலைமை மோசமாகும். கடன் வாங்க கூடிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். சில பேருக்கு மருத்துவ செலவுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனம் இருக்கட்டும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம், நல்ல உபசரிப்பு என்று இந்த நாள் இனிய நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். இந்த விடுமுறை நாளை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்ச்சியடைய முடியாத சூழ்நிலை வர வாய்ப்பு உள்ளது‌. இருப்பினும் நம்பிக்கையை தளர விடக்கூடாது. இறை வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாள் பகை விலகும். மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்கவும். வெயில் சமயத்தில் வெளியே செல்ல வேண்டாம். குறிப்பாக வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று யோகமான நாளாக இருக்கும். அதிர்ஷ்டம் வீடு தேடிவரும். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவைக்கு ஏற்ப செலவுகளை செய்யுங்கள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் இருக்கும் போது அதை சேமிக்க கற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். வாழ்க்கைத் துணையின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகம் வரும்‌. வாக்குவாதம் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குறைவாக பேசுங்கள். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். முடிந்தால் மௌன விரதம் இருங்கள் பிரச்சினையே வராது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

99 0 0