உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வேலணையில் உதயமாகும் ‘Star Gold’ தொழிற்சாலை – 50 க்கும் மேற்பட்டோருக்கு உடனடித் தொழில் வாய்ப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

​வேலணை நகர் வங்களாவடியை அண்மித்த பகுதியில் இந்தியத் தொழில்நுட்பத்தின் (Indian Technology) உதவியுடன் பல கோடி ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வேலணைப் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்நிறுவனத்தினூடாக நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கப்பட்டுள்ளது.

Star Gold நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாக நூடில்ஸ் (Noodles) அமையும் அதேவேகையில், உயர்தரமான அரிசிமா, அவித்த மா, மற்றும் மிளகாய்த்தூள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

உள்ளூர் சந்தையில் மலிவான விலையில் தரமான பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதேவேளை, இப்பொருட்கள் சர்வதேச ஏற்றுமதி தரம் வாய்ந்ததாகவும் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிநவீன இயந்திரங்களுடன் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்சாலை, எதிர்வரும் மாதம் தனது வணிக ரீதியான உற்பத்திச் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது.

​இவ்வேலைத்திட்டமானது வேலணைப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0