உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ அமைக்கும் செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
94 பார்வைகள்

கல்முனை மற்றும் மாளிகைக்காடு கரையோரப் பிரதேசங்களில் கடலரிப்பைத் தடுப்பதற்கான ‘கல்வேலி’ (Revetment) பாதுகாப்பு செயற்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி அத்துடன் மாளிகைக்காடு அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு, கல்வேலி அமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் புதன்கிழமை(22) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

மக்களின் நீண்ட கால பிரச்சினையான கடல் அரிப்பு பிரச்சினைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா இதற்கு முன்னரும் எடுத்த பல நடவடிக்கைகள் வெற்றி கண்ட போதிலும் எஞ்சியுள்ள சில பகுதிகளுக்கும் கல்வேலி இட்டு பாதுகாக்கும் பணி தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

144 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

135 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

129 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

129 0 0