உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆறு நாட்களில் மாத்திரம் 44 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
113 பார்வைகள்

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 42 கோர விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

வீதிகளில் மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை உயர்த்தியும், முச்சக்கர வண்டிகளை இரண்டு சக்கரங்களில் ஓட்டியும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்குப் பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு “ஹீரோ” ஆக முயல வேண்டாம் என்றும், இது உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேனாதீர சுட்டிக்காட்டினார்.

வீதி விதிமீறல்களைக் கண்காணிக்கப் பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் நாடியுள்ளனர். டேஷ் கமராக்கள் அல்லது அலைபேசிகளில் பதிவாகும் விதிமீறல் காணொளிகளைப் பொலிஸாருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த 23 காணொளிகளில் 11 சம்பவங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் நீதிமன்றிலும் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

விபத்து மரணங்கள்: கடந்த ஆண்டுடன் ஒப்பீடு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்து மரணங்கள் இம்முறை ஓரளவு குறைவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் 13, 14, 15 ஆகிய நாள்களில் 26 மரணங்கள் பதிவாகியிருந்தன.

இம்முறை அதே மூன்று நாட்களில் அந்த எண்ணிக்கை 19 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக ஆறு நாட்களில் 44 பேர் உயிரிழந்துள்ளமை கவலையளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களாவர்.

தெளிவற்ற முறையில் இலக்கத் தகடுகளை மாற்றியமைக்கும் வாகனங்களுக்கு 15,000 முதல் 25,000 ரூபா வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், அதிக புகை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் வழங்க 070 355 2525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராகவும், போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகவும் சட்டத்தை மிகக் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

122 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

134 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

129 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

131 0 0