இன்றைய ராசி பலன்கள் – 17.04.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். உங்களுடைய கடமைகளில் இருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியும் செய்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகம் நிறைந்த இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் தானாக விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கட்டுமான தொழில் நல்ல இலாபத்தை கொடுக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டு.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். லட்சுமி கடாட்சம் கூடும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் விலகும். நீண்ட நாள் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பேச்சுத்திறமை அதிகரிக்கும் நாள் இன்று.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உறுதியோடு செயல்படுவீர்கள். தைரியத்தோடு உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். பேச்சு திறமை வெளிப்படும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் டென்ஷன் ஆன நாளாக இருக்கும். கொஞ்சம் முன்கோபம் வெளிப்படும். உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. நேரம் வீணாக கடந்த செல்லும். கவனமாக செயல்பட வேண்டும். அதிக நேரம் கைபேசி பார்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை என்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். தடைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் என்று பொறுமையாக இருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் காதல் கைகூடும் நாள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த நபரை மீண்டும் சந்திப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்க வேண்டும். கோபத்தை குறைக்க வேண்டும். மற்றபடி உங்களுக்கு தேவையான உதவிகள், தேவையான நேரத்தில் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று ஆதாயம் இல்லாமல் ஒரு வேலையை செய்ய மாட்டீங்கள். இலாப நஷ்ட கணக்கு பார்த்து நடந்து கொள்வீர்கள். கொஞ்சம் சுயநலமாக தான் சிந்திப்பீர்கள். நல்ல நண்பர்கள், நல்ல உறவுகளுக்குள் கொஞ்சம் மனஸ்தாபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். சுயநலத்தோடு சேர்த்து பொது நலமும் இருக்க வேண்டிய நாள் இன்று.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். உங்களுடைய பேச்சுக்கு, செயலுக்கு ஆதரவு கிடைக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். பிரச்சினைகளிலிருந்து விடுபடக் கூடிய நாள் இன்று.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் உங்களுடைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வியாபாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். இலாபம் இரட்டிப்பாகும் நாள் இன்று.