உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்த அநுர.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க, அக்கமஹா பண்டித அதிவணக்கத்துக்குரிய மகுலேவே விமல நாயக்க தேரரைச் சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அவர் வசிக்கும் மீரிகம, மினியோலுவ, ஸ்ரீ வித்யாவாச பிரிவென மகா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, மகாநாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதன்போது மகாநாயக்க தேரர் செத்பிரித் பாராயணம் செய்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக ஜனாதிபதிக்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கினார்.

அதிவணக்கத்துக்குரிய மகுலேவே தம்மரத்தன தேரர், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமிந்த லலித் குமார மற்றும் மீரிகம பிரதேச சபையின் தலைவர் சுமின் மஹிந்தலால் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

53 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0