உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பெரும்பான்மையைக் காட்டி மோசடிக்காரர்களை பாதுகாக்க முடியாது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

“நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிலக்கரி மோசடியில் ஈடுபட்ட அமைச்சரை அரசாங்கம் பாதுகாத்தாலும், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தியே தீருவோம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்கும் என்பது எமக்கு முன்பே தெரியும். ஆனால், ஊழலுக்கு இடமளிக்க மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மோசடிக்கு ஆதரவாக வாக்களித்துத் தங்களைக் காத்துக்கொண்டுள்ளனர் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர்.” – என்றார்.

இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பாரிய மோசடிகளில் ஒன்றாக இதனை வர்ணித்த முஜிபுர் ரஹ்மான், தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவினால் நாட்டுக்கு நேரடியாக 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும், இது அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

“இந்த மோசடிக்கு அமைச்சர் குமார ஜயக்கொடி மாத்திரம் பொறுப்பல்ல. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி உள்ளிட்ட முழு அமைச்சரவையுமே பொறுப்புக்கூற வேண்டும். நாடாளுமன்றத்தில் பிரேரணையைத் தோற்கடித்ததால் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. சட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் எவ்வளவுதான் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல்வாதிகளைப் பாதுகாத்தாலும், மக்கள் பணத்தைச் சூறையாடிய எவரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது.” – என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

53 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0