உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த 18 வயது கவுட்

120 பார்வைகள்

8 வயதான கவுட் கவுட், 200 மீட்டர் தூரத்தை வெறும் 19.67 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 200 மீட்டர் இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம், 20 வயதிற்குட்பட்டோருக்கான (Under-20) உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார்.ஜமைக்காவின் உசைன் போல்ட் தனது 18 ஆவது வயதில் 200 மீட்டரை 19.93 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.
தற்போது கவுட் கவுட் 19.67 வினாடிகளில் கடந்து, அதே வயதில் போல்ட்டை விட அதிவேகமான வீரராக உருவெடுத்துள்ளார்.

தென் சூடான் வம்சாவளியைச் சேர்ந்த இவர், சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், 20 வினாடிகளுக்குக் குறைவாக 200 மீட்டரைக் கடந்த முதல் அவுஸ்திரேலியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0