உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கை பெண்ணை தாக்கிய உக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கல்கிசையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி இரவு, கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது, இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியதுடன், கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இரவு கண்காணிப்பு பணியில் இருந்த அதிகாரிகளால் குறித்த பெண் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த பெண்ணை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இலங்கை பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டுப் பெண் கடந்த 12 ஆண்டுகளாக இலங்கையில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

26 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0