சூட்சுமமான முறையில் போதைப்பொருள் விற்பனை; பெண் ஒருவர் கைது.!
கண்டியில் அதிஷ்ட இலாபச் சீட்டு விற்பனை செய்வது போல் காட்டிக் கொண்டு ‘ஹெரோயின்’ போதைப்பொருள் விற்பனை செய்ய பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி தலதா வீதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்திற்கு முன்னால் மேற்படி அதிஷ்ட இலாபச் சீட்டுகளை விற்பனை செய்வது போல் நடித்து, ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி பெண் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் மற்றும் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய மற்றும் சிலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.