உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

என்.டி.பி. வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கைக்கு வருகை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

என்.டி.பி. வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் மெய்நிகர் பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அது குறித்து விசாரணை நடத்த சர்வதேச பொலிஸாரின் விசேட நிபுணர் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் உள்ள சர்வதேச பொலிஸ் தலைமையகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாரிய மோசடி தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் வங்கியின் தலைமையகத்திலுள்ள கொடுப்பனவு தீர்வைப் பிரிவின் உதவி முகாமையாளர் மற்றும் அவரது சகோதரரும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடியினால் வங்கியின் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்கு மீதிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று என்.டி.பி. வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வங்கியின் வழமையான செயற்பாடுகள் மற்றும் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, என்.டி.பி. வங்கியின் மூலதன அளவு மற்றும் நிதி திரவத்தன்மை தொடர்பான விகிதங்கள், இலங்கை மத்திய வங்கியின் குறைந்தபட்ச ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் அதிக மட்டத்திலேயே காணப்படுகின்றன. எனவே, வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

41 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

62 0 0
இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

66 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

57 0 0