தினகரன் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் புதுவருடப் பிறப்பு ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழமையான இந்த புத்தாண்டு இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
பிறந்துள்ள சித்திரை புத்தாண்டு ‘பராபவ’ வருடமானது தினகரன் இணையத்தள வாசகர்கள் அனைவரது வாழ்விலும் சகல செல்வங்களும் பெற்று நோய்நொடி இன்றி சிறப்புடன் வாழ வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மலர்ந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது அனைவருக்கும் சிறப்பானதாக அமைய தினகரன் வாசகர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தினகரன் இணையத்தளம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
பராபவ தமிழ் சித்திரை புத்தாண்டு 2026 – சுபநேரங்கள்
திகதி: 14.04.2026 (செவ்வாய்க்கிழமை)
விஷ புண்ணிய காலம் / மருத்து நீர் வைக்கும் நேரம்:
அதிகாலை 04.40 மணி – நண்பகல் 12.40 மணி வரை
புதுவருடம் பிறக்கும் நேரம்
வாக்கிய பஞ்சாங்கம் – 8.40
திருக்கணித பஞ்சாங்கம் – 9.32
அணிய வேண்டிய ஆடை
சிவப்பு நிற பட்டாடை அல்லது சிவப்பு கரை கொண்ட வெள்ளை பட்டாடை
கைவிசேடம் பரிமாறும் நேரங்கள் (15.04.2026)
காலை 06.35 – 07.25
காலை 10.00 – முற்பகல் 11.15
பகல் 01.45 – 02.12
சங்கிரம தோஷ நட்சத்திரங்கள்
திருவாதிரை, புனர்பூசம் (4ஆம் பாதம்), பூசம், ஆயில்யம், சுவாதி, அவிட்டம் (3,4ஆம் பாதங்கள்), சதயம், பூரட்டாதி (1,2,3 பாதங்கள்)