உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மும்பையை வீழ்த்தி; ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி!

66 பார்வைகள்

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 20ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று 12 ஆம் திகதி மோதின.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி சிறப்பாக விளையாடினர்.
சால்ட் 36 பந்துகளில் 78 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாச, விராட் கோலி 38 பந்துகளில் 50 ஓட்டங்கள் (5 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய கேப்டன் ரஜத் பட்டிதார் 20 பந்துகளில் 53ஓட்டங்களும், டிம் டேவிட் 16 பந்துகளில் 34 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன் காரணமாக ஆர்.சி.பி. அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்களை குவித்தது.
தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரிக்கில்டன் 22 பந்துகளில் 37 ஓட்டங்கள், ரோகித் சர்மா 13 பந்துகளில் 19 ஓட்டங்கள், சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 33 ஓட்டங்கள் குவித்தார்கள்.
போட்டி முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்களை எடுத்தது.

இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூத்தர்ஃபோர்டு 31 பந்துகளில் 71 ஓட்டங்கள் எடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0