உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 12.04.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
64 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. மனமகிழ்ச்சி நிறைந்த இந்த நாளில், மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். காதல் கைகூடும் திருமண பேச்சு வார்த்தைகளும் நடக்கும். மனநிறைவு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை தரும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுடைய கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர்கல்வி படிப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும். தீரா பகை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக சாந்தமாக உங்களுடைய வேலைகளை செய்வீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. எவ்வளவு பெரிய புகழ் உங்களை தேடி வந்தாலும் உங்களுடைய நிலை தடுமாறாமல் இருக்கும். தலைக்கனம் இருக்காது. இந்த அமைதி உங்களுக்கு மேலும் பெருமைகளை கொண்டு வந்து சேர்க்கும். வாழ்த்துக்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். தேவையில்லாத சிந்தனை உங்களை காயப்படுத்தும். சின்னச் சின்ன சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பெரிதாக பாதிப்புகள் இல்லை. இறைவழிபாடு செய்யுங்கள். இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள் உங்களுக்கு நிச்சயம் நல்லதே நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். சந்தோஷமாக உங்களுடைய நேரத்தை செலவழிப்பீர்கள். நீண்ட நாள் தெரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். செலவுகள் குறையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும் பகை விலகும் நாள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளை பேச தொடங்கலாம். வேலையை பொறுத்தவரை சீரான போக்கு நிலவும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சி நடத்த பேச்சு வார்த்தைகளை தொடங்கலாம். சுப செலவுகள் ஏற்படும். சுபமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். பெரிதாக பிரச்சினைகள் வராது. கூடுமானவரை பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வெயில் நேரத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் பற்றி சிந்திக்கலாம். எதிர்கால சேமிப்பை தொடங்கலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாள் இனிய நாளாக அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பிரச்சினைகள் தீர போகும் நாள். அமைதியான நாள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று உங்களுக்கு ஓய்வும் கிடைக்கும். மன நிம்மதியும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். பிள்ளைகளுடைய கல்வியிலும் நலனிலும் அக்கறை காட்டுவீர்கள். நல்லதே நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ, அந்த இடத்தில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். பகை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத அளவில் உயர செல்ல வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன கோபம், மன வருத்தம் இருக்கும். கோபத்தை அதிகமாக வெளிப்படுத்த வேண்டாம். நிதானமாக இருப்பது நல்லது. அவசரம் இருக்கக் கூடாது. பேசும்போதும் வார்த்தையில் ரொம்ப ரொம்ப கவனம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட தூர பயணங்களால் மன மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். இன்று மாலை நேரத்தில் கொஞ்சம் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

64 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

59 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0