உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வலுசக்தி அமைச்சருக்கு இன்று அக்கினிப் பரீட்சை.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
68 பார்வைகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. விவாதத்தின் முடிவில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்குப் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது எனவும், இதில் பாரிய ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஊழலை நாட்டுக்கு வெளிப்படுத்துவதே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதன்மை நோக்கம் என்று எதிர்க்கட்சித் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்குத் தேவையான பெரும்பான்மைப் பலம் இருப்பதால், இந்தப் பிரேரணையை இலகுவாகத் தோற்கடிக்க முடியும் என்று அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று ஆளுங்கட்சித் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய வாக்கெடுப்பின் முடிவு நாட்டின் அரசியல் மற்றும் வலுசக்தித் துறையில் முக்கிய பேசுபொருளாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

124 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

129 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

138 0 0