உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உள்நாட்டு வர்த்தகர்களுக்கு விநியோகத்தில் முன்னுரிமை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“உள்நாட்டுத் தொழில்துறையினரை வலுப்படுத்துவதே அரசின் பிரதான இலக்காகும். எதிர்காலத்தில் அரசுக்குத் தேவையான விநியோகங்களைப் பெற்றுக்கொள்ளும் போது, உள்நாட்டு வர்த்தகர்களுக்கு முன்னுரிமை மற்றும் விரிவான வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, செஸ் வரி, தொழில்துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் சட்டவிரோதமான முறையில் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுதல் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

தரம் குறைந்த பொருட்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதைத் தடுப்பதற்கும், அது சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க இணக்கம் காணப்பட்டது. அத்துடன், துறைமுகங்களில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், இது தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் பேசுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்பின் தலைவி டானியா எஸ். அபேசுந்தர உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0