உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புக்களை வழங்குவதோ அல்லது அவற்றை சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் அதிகாரிகளிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்திடம் நிதியுதவி கோருவதோ முறையற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளித்தரப்பினரின் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விழாக்களை நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு உபசரிப்புக்காக ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தலா 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து வழங்க பொலிஸ் மா அதிபர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைவாக, 17 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0