உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கையில் புதிய கும்பல் வெளிச்சம் ; ஒரு கோடி விசா மோசடி..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 1 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றச்சாட்டில் மஹரகம பிரதேசத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் மாணவர் விசா (Student Visa) பெற்றுத்தருவதாகக் கூறி, அல்பேனியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகப் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் இருந்து சுமார் 1கோடி ரூபாவுக்கும் அதிகத் தொகையை இவர் மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நிறுவனம் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்த நிலையில், அங்கிருந்து வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் நுகேகொடை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, நாளை ஏப்ரல் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பணம் வசூலித்த மற்றுமொரு நிறுவனமும் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பணியகத்தின் விசேட அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று மீரிகம பகுதியில் முன்னெடுத்த நடவடிக்கையில், மினுவாங்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவரும், ஜா-எல பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணம் செலுத்தும் போது, அந்த நிறுவனங்கள் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு காவல்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0