உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

போர் நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி எரிபொருள், எரிவாயுக்களின் விலைகளைக் குறையுங்கள்! – சபையில் சஜித் வலியுறுத்தல் ..!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
60 பார்வைகள்

“மத்திய கிழக்கில் நிலவும் தற்காலிகப் போர் நிறுத்தச் சூழலை ஒரு வாய்ப்பாகக் கருதி, எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக்  கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள இரண்டு வார கால போர் நிறுத்த இடைவெளியைப் பயன்படுத்தி, நாட்டின் அத்தியாவசிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தச் சூழலில் எரிபொருள், எரிவாயு, விவசாயத்துக்கான உரங்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் ஆகியவற்றின் இறக்குமதியை முறைப்படுத்தி விலைகளைக் குறைக்க வேண்டும்.

மத்திய கிழக்கு பதற்றத்தைக் காரணம் காட்டியே முன்னர் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், தற்போது உலகளாவிய ரீதியில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும். எனவே, இன்று நள்ளிரவோ அல்லது நாளைய தினமோ எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

உர விநியோகம் தொடர்பாக ஜனாதிபதி சபையில் ஒரு நிலைப்பாட்டைக் கூறினாலும், கள யதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது. விவசாயிகள் இன்றும் உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயத்தில் அரசு வெறும் வார்த்தைகளால் இன்றிச் செயலில் காட்ட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த உலகளாவிய சூழலைப் பயன்படுத்தி நிவாரணம் வழங்குவது அரசின் பொறுப்பாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

134 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

136 0 0