ஐபிஎல்: ஒரே நாளில் களம் இறங்கும் 4 தமிழக வீரர்கள் – சவால்களும் வாய்ப்புகளும் என்ன?
ஐபிஎல் 2026 தொடரில் ஏப்ரல் 4 ஆம் திகதி அன்று பல தமிழ்நாட்டு வீரர்கள் களம் காண இருக்கிறார்கள்.
மாலை நடக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் போட்டியில் கேபிட்டல்ஸ் அணிக்காக நடராஜன் களமிறங்குகிறார். முந்தைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இரவு குஜராத் டைட்டன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டைட்டன்ஸ் அணியில் 4 தமிழ்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், ஷாரூக் கான் என மூன்று பேர் முந்தைய போட்டியில் விளையாடினார்கள்.
இந்த 3 டைட்டன்ஸ் வீரர்கள் மற்றும் நடராஜன் ஆகியோர் இன்றும் களமிறங்கப்போகிறார்கள். அவர்களிடம் என்ன எதிர்பார்க்கலாம்? அவர்கள் இந்தப் போட்டியில் சந்திக்கப்போகும் சவால்கள் என்ன? கடந்த போட்டியில் களமிறக்கப்படாத சாய் கிஷோருக்கு இன்று வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பாக்கப்படுகின்றது.