உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை

71 பார்வைகள்

இலங்கை, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்குபற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முக்கோணத் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனையாக களமிறங்கும் வீனஸ் வீரப்புலி இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது விசேட அம்சமாகும்.


வீனஸின் தந்தை அஜந்த வீரப்புலி, இலங்கையின் முன்னாள் முதல் தரக் கிரிக்கெட் வீரர் ஆவார்.
இலங்கை வீராங்கனைஅவர் கோல்ட்ஸ், NCC, லங்கன் மற்றும் தமிழ் யூனியன் ஆகிய அணிகளுக்காக 36 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதங்களுடன் 1,243 ஓட்டங்களை குவித்துள்ளார்.


இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை | Sri Lankan Player In England Women S Cricketகொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான அஜந்த, தனது மனைவி கிறிஸ்டீனுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்.

பிரித்தானியாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை நடத்தி வரும் அவர், தனது மகளையும் ஒரு சிறந்த வீராங்கனையாக உருவாக்கியுள்ளார்.

வீனஸ் வீரப்புலி இங்கிலாந்து கிரிக்கெட்டில் மிகக்குறுகிய காலத்தில் முத்திரை பதித்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல வீராங்கனை ஷார்லட் எட்வர்ட்ஸ் பெயரில் வழங்கப்படும் 16 வயதுக்குட்பட்ட சிறந்த வீராங்கனை விருதை வீனஸ் வென்றுள்ளார்.

இதன் பின்னரே அவருக்கு இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை அணியின் தலைவி
தந்தை அஜந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர், மகள் வீனஸ் வலதுகை பந்து வீச்சாளராகும். இருவருடைய கைகளும் திசைகளும் வேறாக இருந்தாலும், துடுப்பாட்ட வீரர்களுக்குப் பந்து சுழன்று வரும் திசை ஒன்றாகவே அமையும்.

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டில் அசத்தும் இலங்கை வீராங்கனை Sri Lankan Player In England Women’s Cricket இது வீனஸுக்கு தனது தந்தையிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளப் பெரும் உதவியாக உள்ளது.

வீனஸ் தனது முன்மாதிரியாக கருதுவது இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து என குறிப்பிட்டுள்ளார்.வீனஸின் சகோதரரும் இங்கிலாந்தில் ஒரு இளம் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகின்றார்.

தற்போது இங்கிலாந்து அணிக்காக இலங்கை மண்ணில் விளையாடினாலும், வீனஸ் விடுமுறைக்காக இலங்கை வரும் போதெல்லாம் கொழும்பு மைதானங்களில் பயிற்சி பெறுவதையும், இலங்கை சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0