உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உயிரியல் ரீதியான பெண்களுக்கு மட்டுமே அனுமதி – ஒலிம்பிக்கில் வருகிறது புதிய சட்டம்!

39 பார்வைகள்

ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை (SRY gene test) இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பைச் சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று (26-03-2026) வெளியாகியுள்ள இந்தத் தீர்மானத்தின்படி 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் (LA2028) ஒலிம்பிக் முதல் மூன்றாம் பாலினத்தவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது முற்று முழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்காது மற்றும் அது பாதுகாப்பற்றது என சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் “கிர்ஸ்டி கோவென்ட்ரி” விளக்கம் அளித்துள்ளார். பெரிஸ் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் எழுந்த பாலின சர்ச்சைகளைத் தொடர்ந்து 18 மாத கால விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மனித உரிமை மற்றும் LGBTQ+ அமைப்புகள் இதற்குத் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
IOC இன் இந்த முடிவு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெண்கள் விளையாட்டில் ஆண்களுக்கு இடமில்லை என்ற கொள்கைக்குப் பெரும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஏற்கனவே 2025ஆம் ஆண்டு பெப்ரவரியில் அமெரிக்காவில் இதற்கான தடையை நடைமுறைப்படுத்திய ட்ரம்ப், LA 2028 ஆம் ஆண்டுஒலிம்பிக்கிலும் மூன்றாம் பாலினத்தவர்களை அனுமதிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இந்த விதிமுறை, பெண் வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0