மலையகத் தமிழர்கள் தனித்த இன அடையாளம் கொண்டவர்கள் – கனேடியத் தூதுவரிடம் மனோ எம்.பி. வலியுறுத்து.!
மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாக மட்டுமே பார்க்க முடியாது என்றும், அவர்கள் சுமார் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தனித்த இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாக உள்ளனர் என்றும் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்டின் உடன் கொழும்பிலுள்ள கனேடிய இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கருத்துகளை முன்வைத்தார்.மேலும், மலையகத் தமிழர்களில் கூலித் தொழிலாளர்கள் ஒரு சிறு பகுதியே ஆகும் என்றும், முழுமையாக பார்க்கும்போது அவர்கள் ஒரு தனித்த தேசிய இனமாக வளர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் இன்னும் முழுமையான குடியுரிமை மற்றும் மனித உரிமைகள்இன்றி வாழ்ந்து வருவது கவலைக்குரியது என சுட்டிக்காட்டிய அவர், இந்த நிலையை சரிசெய்ய சர்வதேச ஆதரவு அவசியம் என்றும் தெரிவித்தார்.
கனடாவின் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்கள் மலையக மக்களையும் சென்றடைய வேண்டும் என வலியுறுத்தியதாகவும், இந்த விடயத்தில் கனேடிய தரப்பு சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.


