உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மெக்ஸ்வெல்லின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? அவுஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு!

65 பார்வைகள்

2026-2027 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் (Cricket Australia) 21 வீரர்கள் அடங்கிய தேசிய ஒப்பந்தப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

இதில் அதிரடி வீரரான ” கிளென் மெக்ஸ்வெல்” மற்றும் இளம் தொடக்க வீரர் ”சேம் கோன்ஸ்டாஸ்” ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் அடுத்த 12 மாதங்களில் அவுஸ்திரேலிய அணி 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டிகளை மையமாகக் கொண்ட அட்டவணையைக் கருத்தில்கொண்டு, சேம் கோன்ஸ்டாஸிற்கு பதிலாக, 31 வயதான ஜேக் வெதரால்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மேட் ஷார்ட் ஆகியோர் ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் லான்ஸ் மோரிஸ் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெறவில்லை.

இரண்டு முறை ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் ஒருமுறை டி20 உலகக் கிண்ணம் வென்று கொடுத்துள்ள 37 வயதான மெக்ஸ்வெல்லின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்த முடிவு பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்கொட் போலண்ட் ஆகியோருக்குப் பின் அணியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு ”ஜை ரிச்சர்ட்சன்” நீக்கப்பட்டது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்குப் பதிலாக Ashes தொடரில் சிறப்பாக செயற்பட்ட 31 வயதான ”பிரெண்டன் டோகெட்” மற்றும் 36 வயதான மைக்கேல் நேசர் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் குழுத் தலைவர் ஜோர்ஜ் பெய்லி கூறுகையில், “அடுத்த 12 மாதங்கள் பல்வேறு சவால்களைக் கொண்ட டெஸ்ட் தொடர்களை எதிர்கொள்ளவுள்ளோம், அதனால் தான் டெஸ்ட் மற்றும் அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

39 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

19 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிராக செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 266 ஓட்டங்கள்…

18 0 0
விளையாட்டுச் செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்…

36 0 0