• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஜனாதிபதி இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் அக்கறை கொள்ளவில்லை.!

Mathavi by Mathavi
April 22, 2025
in இலங்கை செய்திகள், தேர்தல் களம்
0 0
0
ஜனாதிபதி இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் அக்கறை கொள்ளவில்லை.!
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை. ஐ.நா.சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல்ப்படுத்த முடியாது என்று. இது தான் தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகிற அக்கறையா? என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) காலை 11.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது வேட்பாளர்களை ஆதரித்து உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் திறமையானவர்களாக காணப்படும் நிலையில் குறித்த சபைகளை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும்.

ஜே.வி.பி.அரசாங்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஜனாதிபதி கடந்த வாரம் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மன்னார் வருகை தந்து உரை நிகழ்த்தினார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் போது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தமது கட்சியாக மாத்திரம் இருந்தால் எவ்வித பாரபட்சம் இன்றி நிதியை ஒதுக்குவதாக தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றி மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்பதே அவரின் செய்தியாக உள்ளது. அவரது கருத்தை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்த்தார்கள். இலஞ்சத்தை கொடுத்து ஜனாதிபதி மக்களை ஏமாற்றுகிறார்.

எனவே ஜனாதிபதி அவர்கள் எவ்வாறு இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும். ஜனாதிபதிக்கு ஆதரவாக அமைச்சர் விமல் ரத்நாயக்க ஒரு படி குரலை உயர்த்தி கூறுகிறார் ஜனாதிபதியினுடைய கூற்றிற்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு தமிழ்த் தலைவர்கள் அருகதையற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஜனாதிபதியின் கட்சிக்கு அதிகளவான ஆசனங்களை வடக்கு மக்கள் வழங்கி உள்ளனர்.

அதை வைத்துக் கொண்டு தமிழ்த் தலைமைகள் பேசுவதற்கு வல்லமை அற்றவர்கள் என்று சொல்லுவதற்கு விமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோக்கியம் உள்ளது என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தினீர்களா?, தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் நீங்கள் அதை கவனத்தில் எடுத்தீர்களா? ஐ.நா.சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல்ப்படுத்த முடியாது என்றும். இது தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகின்ற அக்கறையா?.

நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அரசியல் கைதிகள் சிறைகளில் இல்லை என்று கூறினார்கள். இது தான் நீங்கள் தமிழர்கள் மீது காட்டுகின்ற அக்கரையா? தமிழ் தலைவர்கள் அதற்கு எல்லாம் குரல் கொடுத்தால் நீங்கள் பேச முடியாது என அதிகார வர்க்கத்துடன் தெரிவிக்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் தென் பகுதியில் சிங்கள தலைவர்கள் வாரி தூற்றுகின்ற நிலையில் அமைச்சர் விமல் ரத்நாயக்க அவர்களை பார்த்து எதுவுமே கதைக்கவில்லை.

ஆனால் தமிழ் தலைவர்களை பார்த்து அவர் கூறுகிறார் நாங்கள் கதைப்பதற்கு அருகதையற்றவர்களாம். எனவே எங்களை பற்றி கதைப்பதற்கு விமல் ரத்நாயக்கவுக்கு எந்த அருகதையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் உயர் பீட உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

Mathavi

Mathavi

Related Posts

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

பொகவந்தலாவயில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்பு..!

by Thamil
May 29, 2025
0

பொகவந்தலாவ - டியன்சின் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக பலத்த சந்தேகம் நிகழ்வதாக தெரிய வருகிறது....

யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

யாழில் பென்ட்ரைவினை இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் கைது..!

by Thamil
May 29, 2025
0

யாழில் பென்ட்ரைவினை (Pendrive) இலஞ்சமாக பெற்ற கிராம சேவகர் ஒருவர் இன்றைய தினம் (29) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அத்தியடி ஜே/78 கிராம சேவகராக கடமை...

600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

600 ரூபா செலவிற்கு 60,000 ரூபா பத்திரத்தில் கையொப்பமிட வற்புறுத்திய NPP இணைப்பாளர்..!

by Thamil
May 29, 2025
0

யாழ் வடமராட்சிக் கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மீது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி வேட்பாளர்கள் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தி...

இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ; பொது மக்கள் பாதிப்பு..!

by Thamil
May 29, 2025
0

இலங்கை வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் இன்றைய தினம் (29) வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். அரச...

வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில் பண்பாட்டு பெருவிழா..!

by Thamil
May 29, 2025
0

வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு பெருவிழா இன்று (29.05) பாடாசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து...

அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

அரச பேருந்து சாரதிக்கு சட்ட நடவடிக்கை ; மோட்டர் போக்குவரத்து திணைக்களம் அதிரடி..!

by Thamil
May 29, 2025
0

போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்து ஒன்றின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், பத்து நாட்களுக்குள் பேருந்தை சீரமைக்காவிடில் பேருந்திற்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும்...

மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

by Thamil
May 29, 2025
0

மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய...

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை: மக்கள் அசௌகரியம்.!

by Mathavi
May 29, 2025
0

வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது....

மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

மன்னார், செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.!

by Mathavi
May 29, 2025
0

மன்னார் மற்றும் செட்டிக்குளம் மக்களின் நன்மை கருதி மல்வத்து ஓயாத் திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Load More
Next Post
இன்று இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு.!

இன்று இடம்பெற்ற கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு.!

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரிக்கும் அமைச்சர்.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரிக்கும் அமைச்சர்.

விரைவில் காணிகள் விடுவிப்பு..!

விரைவில் காணிகள் விடுவிப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி