• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம்.!

Mathavi by Mathavi
March 15, 2025
in இலங்கை செய்திகள், மன்னார் செய்திகள்
0 0
0
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமனம்.!
Share on FacebookShare on Twitter

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குரு முதல்வராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் இந்த நியமனத்தை வழங்கினார்.

மடு திருப்பதியில் ஐந்து நாட்கள் நடைபெற்ற மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானத்தின் நிறைவில் வெள்ளிக்கிழமை (14.03.2025) இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

ஒரு மறைமாவட்டத்தில் குரு முதல்வர் பதவி என்பது மறைமாவட்ட ஆயருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவியாகும்.

ADVERTISEMENT

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ள அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மன்னார் மாவட்டத்தின் முருங்கன் கிராமத்தில் காலம்சென்ற திரு. திருமதி சந்தான் பாவிலு தம்பதியருக்கு பதினொராவது மகனாக 1969ஆம் ஆண்டு பிறந்தார்.

முருங்கன் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது உயர்தரக் கல்வியையும் கற்றார்.

யாழ்ப்பாணம் புனித மாட்டினார் சிறிய குருமடத்தில் தனது ஆரம்ப குருத்துவ உருவாக்கத்தைப் பெற்ற இவர், தனது மூன்று வருட மெய்யியல் கல்வியை கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியிலும், நான்கு வருட இறையியல் கல்வியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியிலும் கற்றார்.

1997ஆம் ஆண்டு அன்றைய மன்னார் ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகையினால் மன்னார் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

வங்காலை, மன்னார் ஆகிய பங்குகளில் உதவி பங்குத்தந்தையாகவும், தலைமன்னாரில் பங்குத்தந்தையாக மூன்று வருடங்களும் பணியாற்றினார்.

தொடர்ந்து மன்னார் மறை கல்வி இயக்குனராக ஐந்து வருடங்களும், கலையருவி எனப்படும் சமூகத்தொடர்பாடல் அருட்பணி மைய இயக்குனராக ஏழு வருடங்களும், மன்னார் மறைமாவட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் சர்வமத உரையாடல் ஆணைக்குழுவின் இயக்குனராக ஒன்பது வருடங்களும், ‘மன்னா’ என்ற மறைமாவட்டப் பத்திரிகையின் ஆசிரியராக 16 வருடங்களும், மன்னார் சிறிய குருமட அதிபராக ஐந்து வருடங்களும், மன்னார் மறைமாவட்ட செனட் சபையின் செயலாளராக ஐந்து வருடங்களும் பணியாற்றினார்.

தற்போது தோட்டவெளி வேதசாட்சிகள் இராக்கினி திருத்தலத்தின் பரிபாலகராகவும், தோட்டவெளி பங்கு தந்தையாகவும், மன்னார் மறைக்கோட்ட முதல்வராகவும் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில் இந்தப் புதிய பணிப்பொறுப்பு அடிகளாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் நேசன் அடிகளார் சிறந்த கல்வித் தகைமை கொண்டவராக விளங்குகின்றார். ரோமாபுரியில் உள்ள ஊர் பானியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல்மானிப் பட்டத்தையும் இறையியல்மானிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் எம். ஏ. பட்டத்தையும் கிறிஸ்தவ நாகரீகத்தில் எம். பில். பட்டத்தையும் பெற்றுள்ளார்.

தற்போது கண்டி பெரதெனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்யும் நிலையில் உள்ளார். சிறந்த தமிழ் அறிஞராக திகழும் தமிழ் நேசன் அடிகளார் பத்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.

பல தேசிய, சர்வதேச தமிழ் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு மன்னாரில் மன்னார் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக இரண்டு தடவைகள் பணியாற்றியுள்ளார்.

2010ஆம் ஆண்டு நான்கு நாள் மன்னார் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும், 2013ஆம் ஆண்டு மூன்று நாள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவையும் மன்னாரில் பிரமாண்டமாக நடாத்தி தேசிய சர்வதேச கவனத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த இரண்டு மாநாடுகளும் அடிகளாரின் செயற்திறனை வெளிப்படுத்திய இருபெரும் நிகழ்வுகளாகும்.

அடிகளாரின் தந்தை திரு. சந்தான் பாவிலு அவர்களும். அவருடைய தந்தை திரு. மரியான் சந்தான் அவர்களும் பல கத்தோலிக்க நாட்டுக் கூத்து நாடகங்களை எழுதிய புலவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தின் முதுபெரும் தமிழ் அறிஞர்களான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் வழியில் தமிழ் பணி புரியும் அடிகளார் தொடர்ந்து எழுதியும், தமிழ் மாநாடுகளில் பங்கெடுத்தும் வருகின்றார்.

சமயப் பணியையும், தமிழ்ப் பணியையும் தனது இரு கண்களாகக் கொண்டு இடையறாது பணியாற்றும் அடிகளாரின் திறமையையும் செயற்திறனையும் அங்கீகரிக்கும் முகமாக மன்னார் மறைமாவட்ட திருச்சபை மறைமாவட்ட குருமுதல்வர் பணிப்பொறுப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! Today
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 1 day ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டி..!

      தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தினப் போட்டி..!

      by Thamil
      May 28, 2025
      0

      அகில இலங்கை வலயமட்ட தமிழ்த்தினப் போட்டியானது அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. குறிந்த போட்டியானது திருக்கோவில் வலயக்...

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

      by Thamil
      May 28, 2025
      0

      காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை...

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரின் சொத்துக்கள் முடக்கம்..!

      by Thamil
      May 28, 2025
      0

      போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் ஒருவரின் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர். எம்பிலிட்டிய ஜயசிங்க...

      மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

      மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      மட்டக்களப்பு - திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றின் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (28)இடம்பெற்றுள்ளதாக...

      நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

      நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது..!

      by Thamil
      May 28, 2025
      0

      2788 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு...

      இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

      இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு..!

      by Thamil
      May 28, 2025
      0

      திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட, முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம் தொடர்பான நிகழ்வு இன்று இடம்பெற்றது. திஹாறிய அல்...

      நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

      நீர்கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்..!

      by Thamil
      May 28, 2025
      0

      நீர்கொழும்பு - தலாதுவ பகுதியில் இன்று (28) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நபர்களுக்கு...

      தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

      தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விற்பனைக் கண்காட்சி..!

      by Thamil
      May 28, 2025
      0

      சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் இன்று (28) புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில்...

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      தமிழரசுக் கட்சியின் மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் அறிவிப்பு..!

      by Thamil
      May 28, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம்முறை நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வரத்தினம்...

      Load More
      Next Post
      கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளியில் பாலர் சந்தை! (சிறப்பு இணைப்பு)

      கோப்பாய் உதயசூரியன் முன்பள்ளியில் பாலர் சந்தை! (சிறப்பு இணைப்பு)

      யா/கெருடாவில் இ.த.க பாடசாலையில் கணித விளையாட்டுக்கள் செயற்றிட்டக் கண்காட்சி.! (சிறப்பு இணைப்பு)

      யா/கெருடாவில் இ.த.க பாடசாலையில் கணித விளையாட்டுக்கள் செயற்றிட்டக் கண்காட்சி.! (சிறப்பு இணைப்பு)

      இன்று இடம்பெற்ற கொடூர சம்பவம்; சகோதரர்கள் இருவர் கொ லை.!

      இன்று இடம்பெற்ற கொடூர சம்பவம்; சகோதரர்கள் இருவர் கொ லை.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி