தெரணியாகலை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், சந்தேக நபர்கள் போலி என்ஜின் எண்கள்,செஸி எண்கள் மற்றும் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ஜீப் வண்டி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இந்த ஜீப் வண்டி ஏதேனும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Related Posts
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளார் என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான நிலையில்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட...
உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: சாவகச்சேரியில் கதவடைப்பு போராட்டம்.!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்குக் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில்...
பசில் விரைவில் கைது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மறைமுகமாகத் தெரிவிப்பு.!
இலங்கை நீதிமன்றங்களினால் பகிரங்கமாகச் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் ஒருவர் மிக விரைவில் சட்டபூர்வமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்று...
குத்தகைக்கு வழங்கப்பட்ட கடைகளில் ஒப்பந்தத்தை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!
மன்னார் நகரசபையினால் வழங்கப்பட்ட கடைகளுக்கு முன் அல்லது நடைபாதையில் எந்தவிதமான வியாபாரங்களையும் செய்யக்கூடாது. மேலும் கடைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யக்கூடாது என்ற நிபந்தனைக்கு கடைகள் வழங்கப்பட்ட போதிலும்...
பயங்கரவாத தடைச் சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும்.!
இலங்கையில் நீண்டகாலமாகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதற்குரிய முதற்கட்ட...
யாழில் இளம் தவில் கலைஞர் உயிர்மாய்ப்பு.!
இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இராசபாதை வீதி, கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரசாந் சச்சின் (வயது 17) என்பவரே இவ்வாறு...
பத்தனை கடையறைகளுக்கான திறந்த கேள்வி கோரல்.!
கொட்டகலை பிரதேச சபைக்கு சொந்தமான பத்தனை காட்டுமாரியம்மன் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள ஐந்து கடையறைகளை வாடகைக்கு வழங்குவதற்காக திறந்த கேள்வி (Tender) கோரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, குறித்த...
யாழில் பெருமளவான T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு.!
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டில் கழிவறை குழி வெட்டுவதற்காக மண் தோண்டிக் கொண்டிருந்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேகத்திற்குரிய பொதிகள் கிடைத்துள்ளன....
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலைப் பார்வையிட்ட ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள்.!
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) தரம் 1 இல் கல்வி பயிலும் மாணவர்கள் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலைப் பார்வையிட இன்று...










