இரத்தினபுரி, கொலொன்ன பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை (05) காலை சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நமுத்கடுவ, மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்தவர் கொலொன்ன பகுதியில் உள்ள தனது நண்பனின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இவர் நேற்றைய தினம், இரவு உணவை உட்கொண்டு உறங்கச் சென்றுள்ள நிலையில் மறுநாள் காலையில் அறையினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொலொன்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.