கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் 40 குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் மெத்தைகள்,தென்னங்கன்றுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவுக்குட்பட்ட 23Gemunu watch படைப்பிரிவின் ஒழுங்குபடுத்தலில் குறித்த உதவித் திட்ட நிகழ்வு இத்தாவில் கிளி/வேம்போடுகேணி சி.சி.த.க வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
முகமாலை, கிளாலி, வேம்போடுகேணி, இத்தாவில் பகுதிகளை சேர்ந்த நலிவுற்ற 40 குடும்பங்களுக்கே இவ்வாறு மெத்தை மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக 52வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜென்ரல் VDS பெரேரா கலந்து கொண்டதுடன்,
வேம்போடுகேணி சி.சி.த.க வித்தியாலய அதிபர், அருட்தந்தை, கிராம அலுவலர்கள், ஆசிரியர்கள், ஏனைய படைப்பிரிவின் இராணுவ அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






