• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’

admin by admin
May 26, 2025
in இலங்கை செய்திகள்., நிகழ்வுகள்
0
அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’
Share on FacebookShare on Twitter

அறம் பிழைத்தால் தண்டிக்கப்படுவோம் என்ற உண்மையைச் சொல்லும் காப்பியங்களை, இந்தத் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் சிலப்பதிகார விழாக்களை நடத்தும் அகில இலங்கை இளங்கோ கழகத்தை பாராட்டுவதுடன் இந்தப் பணிகளை தொய்வின்றி எடுத்துச் செல்லவும் அவர்களை வேண்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

அகில இலங்கை இளங்கோ கழகம் நடத்தும் ‘சிலப்பதிகார விழா 2025’ துன்னாலை வடிவேலர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. சனிக்கிழமை (24.05.2025) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வுகள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றன.

ஆளுநர் தனது தலைமை உரையில், எங்கள் தமிழ் மொழி, பெரும் காப்பியங்களைப்படைத்த கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் ஆகியோரால் புகழ்பெற்றது. ஒவ்வொரு காப்பியங்களும், திருக்குறளும் எங்கள் வாழ்வின் எக்காலத்துக்கும் தேவையான விடயங்களை சொல்லியிருக்கின்றன.

இளங்கோ அடிகளார் அறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிலப்பதிகாரத்தை படைத்திருக்கின்றார். அறம் என்பதை இன்று பலர் மறந்து செயற்படுகின்றனர். சிலர் அறத்தை தெரிந்திருந்தும் அதன்வழி ஒழுகுவதில்லை.

மனிதன் சந்தோசமாக வாழ்வதற்கே பிறந்தான். அந்தச் சந்தோசம் என்பது பணம், பொருள் சேர்ப்பதில் இல்லை. அறத்தின் வழி நடந்து பிறருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோசம் தங்கியிருக்கின்றது. நாம் உதவி செய்யும்போது எமக்குத் தெரியாமலே பல கரங்கள் எங்களுக்கு உதவி செய்யும். இதுதான் இயற்கையின் நியதி.

சிலப்பதிகாரம் மூன்று முக்கிய விடயங்களை உணர்த்தியிருக்கின்றது.

ஊழ்வினை உறுத்தி வந்து ஊற்றும் என்பது அதில் முதலாவது. நாம் எதைச் செய்கின்றோமோ, எதை விதைக்கின்றோமோ அதுவே எமக்குத் திரும்பக் கிடைக்கும். இது தொடர்பில் நாம் நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்றோம். ஆனால், நிச்சயம் ஒரு நாள் இவற்றுக்கு விடைகிடைக்கும்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது இரண்டாவது. இன்றும் அப்படித்தான். அரசியல் செய்வோர் தவறிழைத்தால் அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர் என்பது மூன்றாவது. பெண்கள் புறக்கணிக்கப்படும் நிலை இன்றும் இருக்கின்றது. அன்று எப்படி இருந்திருக்கும். ஆனால் பத்தினிப் பெண்களை மற்றையோர் வணங்குவர் என்பது இளங்கோ அடிகளார் சொல்லிச் சென்றிருக்கும் உண்மை.

காப்பியங்கள் எங்களுக்கு வழிகாட்டி. இதனை எடுத்துச் சொல்வதன் மூலம் அவர் சொல்லும் அறக் கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி பின்பற்றச் செய்யவேண்டும். இந்த காப்பியங்கள் – நூல்கள் பற்றி பலருக்குத் தெரியாது. இவ்வாறான விழாக்கள் இதை எடுத்துச் சொல்கின்றன. எனவே அகில இலங்கை கம்பன் கழகமாக இருக்கட்டும், அகில இலங்கை இளங்கோ கழகமாக இருக்கட்டும் அவை இந்தப் பணிகளைத் தொடரவேண்டும், என்றார் ஆளுநர்.

இதனைத் தொடர்ந்து கவியரங்கு, கதாப்பிரசங்கம் மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான இலக்கிய ஆணைக்குழு என்பனவும் நடைபெற்றன.

Related Posts

மீன்வாடியில் வெடிப்பு; நால்வர் படுகாயம்.!

மீன்வாடியில் வெடிப்பு; நால்வர் படுகாயம்.!

by Mathavi
June 27, 2026
0

மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

லசந்த, தாஜுதீன், பிரகீத் கொ*லைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்?

by Mathavi
June 27, 2026
0

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொடூரப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியங்களையும், உளவுத்துறைத் தகவல்களையும் திட்டமிட்ட முறையில் மூடி மறைத்த முக்கிய புள்ளிகள்...

தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!

தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!

by Mathavi
June 27, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எவ்வித அரசியல் பழிவாங்கல்களுமின்றிக் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை...

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!

by Mathavi
June 27, 2026
0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

by Mathavi
June 27, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள்...

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

by Mathavi
June 27, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால அவசிய சுற்றுப் பயணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (26)...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார்...

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

by Mathavi
June 27, 2026
0

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர் வெற்றிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்து, நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கான விசேட பிரேரணை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி