இலங்கை விளையாட்டுத்துறையின் பதிவு செய்யப்பட்டுள்ள கராத்தே தற்க்காப்பு கலை முல்லைத்தீவு மாவட்ட கராத்தே சம்பேளனம் இந்நிகழ்வை ஏற்ப்பாடு செய்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் (25.05.2025)நேற்று ஐம்பதாவது ஆண்டு நிறைவு நடைபெற்றது.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பது தற்க்காப்பு கலை பயிற்சி நிலையங்களில் இருந்து சுமார் 400 வரையான மாணவர்கள் தங்களின் கலை வளக்கத்தினை செய்து காண்பித்தார்கள். இந்நிகழ்வில் வரவேற்பு நடனம் சிறப்பித்தது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புதுக்குடிருப்பு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியகட்சகர் வைத்திகலாநிதி ப. பரனிதரன், சிறப்பு விருந்தினராக புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய அதிகாரி எஸ்.சத்தியரூபன், கௌரவ விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கெரத் ,புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அதிபர் ஐ.நெவில்ட் யுவராஜா, பிரதேச சபை செயலாளர் எஸ்.கருசாந்தன், மாவட்ட விளையாட்டு பயிற்டுனர் என பலரும் கலந்திருந்தனர். இந்நிகழ்வு முல்லைத்தீவு மாவட்த்தில் சிறப்புற நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



