“தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம்.”
இவ்வாறு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தல் காலத்தில் மொட்டுக் கட்சி, தொலைபேசி கட்சி, யானைக் கட்சி என்பன ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டன. தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் ஊழலில் ஈடுபடக் கூட்டுச் சேர்கின்றன.
அந்தக் கட்சிகளின் போலி நாடகம், போலி முகத்திரை மக்களுக்குத் தெரியும்.அப்படிச் சபையை அமைத்தால்கூட ஓரிரு வாரங்களுக்குக் கூட சபையை இவர்களால் நடத்த முடியாது. தவிசாளர், உப தவிசாளர் அதிகாரப் போட்டியிலேயே காலம் சென்றுவிடும்.
எனவே, தேசிய மக்கள் சக்திதான் ஆட்சி அமைக்கும். தவிசாளர்கூட எமது கட்சியைச் சார்ந்தவரே நியமிக்கப்படுவார்.” – என்றார்.