வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிப்பன்வெவ பிரதேசத்தில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 2 உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் மற்றும் T 56 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் குழு நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் வெலிஓயா பொலிஸ் பிரிவின் கிரிப்பன்வெவ பகுதியில் குறித்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வெலிஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.