மன்னாருக்கு வடக்காக உள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கையின்போது, குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
கைதான மீனவர்களை தலைமன்னாருக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.