பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்துக்கு நாளை சனிக்கிழமை வருகை தரவுள்ளார்.
நாளை காலை கோப்பாய் கலாசாலையில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதன் பின்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
தொடர்ந்து நாளை மாலை ஏழாலை, சுழிபுரம், சண்டிலிப்பாய் பகுதிகளில் இடம்பெறும் மக்கள் சந்திப்பில் பிரதமர் பங்கெடுக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்தும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பிரதமர் ஹரிணி செல்லவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.