புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் சமுக பணிகளில் ஒன்றான “அனைவருக்கும் சுத்தமான குடிநீர் ” என்னும் எண்ணக்கருவிற்கு அமைய மன்றத்தினால் இலவச குடிநீர் விநியோக திட்டம் ஒன்று மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
கலைவாணி கலை மன்றத்தின் தலைவர் சு. சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் எஸ் ஜோன்போல், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ. கங்கேஸ்வரன் மற்றும் சமுக சேவையாளரும் கவிஞருமான வின்சன் சுதாகர், கலைவாணி கலை மன்றத்தின் முன்னால் செயலாளர் க.கிருஸ்ணப்பிள்ளை மற்றும் கலைவாணி கலை மன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இத்திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய சமுக சேவகரும் வர்த்தகருமான எஸ். ஜெயந்திரா மற்றும் வா. அருண் ஆகியோருக்கு மன்றச் செயலாளர் கோ.கோபாலகிருஸ்ணனால் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன்போது பிரதேச மக்கள் சுத்தமான குடி நீரினை பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


