ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொ லை செய்யப்பட்டுள்ளார்.
தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொ லை செய்யப்பட்ட பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
கணவர் வீடு வந்து மனைவியைச் தேடிய போது, அவர் இவ்வாறு கொ லை செய்யப்பட்டிருப்பதைக் கண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொ லைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.