கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில், கம்பளை – மஹார பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று(1) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு கார்கள் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர், கம்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இருந்து பழக்கடை ஒன்றும் சேதமடைந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.