பன்னல – கங்கானியம்முல்ல வனப்பகுதியில் இன்று காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சடலங்களுக்கு அருகில், அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று பன்னல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 வயதுடைய ஆண் ஒருவரும், 32 வயதுடைய பெண் ஒருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் இருவரும் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஆண் இராணுவச் சிப்பாய் என்றும், பெண் ஒரு ஆசிரியை எனவும் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.